மேயாதமான் இசையமைப்பாளர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்து: தனுஷ் ட்வீட்
மேயாத மான் படத்தில் இசையமைத்த சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் ஆகியோருக்கும் சிறப்பாக நடித்த நடிகர்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.
அவரது ட்விட்டர் பக்கத்தில் படத்தில் சிறப்பாக நடித்த நடிகர்கள், சந்தோஷ், பிரதீப் மற்றும் கார்த்திக் சுப்புராஜூக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார். மேலும் நட்பு, ஒரு தலைக்காதல், நண்பனின் சகோதரி... இது போன்ற சில பார்முலாக்கள் எப்போதுமே வெற்றியடைகின்றன. வாழ்த்துக்கள் எனவும் தனுஷ் கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் உருவான மேயாதமான் படத்தில் வைபவ், ப்ரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரத்னகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு முதன் முறையாக சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப்குமார் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த நிலையில் தனுஷ் இசையமைப்பாளர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் நடிகர்களுக்கும் தனது வாழ்த்தக்களைத் தெரிவித்தள்ளார்.