\
பிரிக்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற தனுஷ்

பிரிக்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற தனுஷ்

பிரிக்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற தனுஷ்
Published on: 

BRICS திரைப்பட விழாவில் அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷூக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோவாவில் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFF)நடைபெற்றது. இதனிடையே முதன்முறையாக இந்த திரைப்பட விழாவுடன் இணைந்து BRICS திரைப்பட விழாவும் நடைபெற்றது. இந்நிலையில், ''அசுரன்'' படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் இந்த படத்துக்காக நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சிறந்த நடிகைக்கான விருது 'ஆன் வீல்' என்ற பிரேசில் படத்தில் நடித்ததற்காக லாரா போல்டோரினி(Lara Boldorini)க்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான விருது தென்னாப்பிரிக்க திரைப்படமான 'பரகத்' மற்றும் ரஷ்ய திரைப்படமான 'தி சன் அபோவ் மீ நெவர் செட்ஸ்' ஆகிய இரண்டு படங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com