இவோக் சார்பாக மதிவாணன் தயாரிப்பில் பாரதிராஜா மற்றும் விஜய் யேசுதாஸ் நடித்து மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கும் படைவீரன் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
முன்னதாக படைவீரன் படத்தை பிரத்தியேகமாக தனுஷிற்காக படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர். படம் தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் படைவீரன் படத்திற்காக கார்த்திக் ராஜா இசையில், ப்ரியன் வரிகளில் உருவான "லோக்கல் சரக்கா பாரின் சரக்கா... ஊத்திக்குடிச்சா எல்லாம் ஒன்னுடா... " எனத் தொடங்கும் பாடலை பாடிக் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் படம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தனுஷ் பாடிய பாடலை இறுதியாக காட்சியாக்கிய படக்குழுவினர் படப்பிடிப்பை நிறைவு செய்தனர். படைவீரன் திரைப்படம் டிசம்பரில் வெளியாகிறது.