செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் - ‘புதுப்பேட்டை 2’ ?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் - ‘புதுப்பேட்டை 2’ ?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் - ‘புதுப்பேட்டை 2’ ?
Published on

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘என்ஜிகே’. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி, நடித்திருந்தார். மேலும், ரகுல் ப்ரீத்சிங், ஜெகபதி பாபு, பாலா சிங், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்திருந்த இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை ஈட்டியது. இப்படத்தின் மூலம் பல வருடங்களுக்குப் பிறகு செல்வாவுடன் யுவன் சங்கர் ராஜா இணைந்திருந்தார்.

இதையடுத்து செல்வராகவன் தம்பியும் நடிகருமான தனுஷ் நடிப்பில்‘பக்கிரி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அப்போது ஊடகங்களை சந்தித்த தனுஷிடம் ‘என்ஜிகே படத்தை பார்த்தீர்களா?’எனக் கேட்டனர். அதற்கு அவர் இன்னும் பார்க்கவில்லை எனப் பதிலளித்திருந்தார். இதனையொட்டி தனுஷ்- செல்வராகவன் கூட்டணி மீண்டும் எப்போது உருவாகும் என திரை ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி இருந்தனர். 

ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இப்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் செல்வா இயக்கத்தில் அவரது தம்பி தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் கூட்டணியில் ஏற்கெனவே வெளிவந்த  ‘புதுப்பேட்டை’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் தனுஷின் ‘அசுரன்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அதனை அடுத்து தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அது சம்பந்தமான புகைப்படம் கூட சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வெளியானது. அடுத்து தனுஷ் தனது அண்ணனின் இயக்கத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இருவரும் எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com