‘ப பாண்டி’ இரண்டாம் பாகத்தில் கவுண்டமணி - தனுஷ் திட்டம்?

‘ப பாண்டி’ இரண்டாம் பாகத்தில் கவுண்டமணி - தனுஷ் திட்டம்?

‘ப பாண்டி’ இரண்டாம் பாகத்தில் கவுண்டமணி - தனுஷ் திட்டம்?
Published on

இன்றைக்கு உள்ள இளம் நடிகர்களில், தனுஷ் பல திறமைகள் கொண்டவர். நன்றாகப் பாடுகிறார். மிக அழகாகப் பாடல்களை எழுதுகிறார். ஏற்கெனவே அவர் தரமான நடிகர் பட்டியலில் முன்னணியில் நிற்கிறார். மேலும் இவர் நல்ல தயாரிப்பாளர். ஒரு சிறந்த இயக்குநராகவும் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். ஆகவே தனுஷின் மார்க்கெட் அளவும் கால்ஷீட் அளவும் நிறைவாக இருக்கிறது. ஒரு படத்தை முடித்த அடுத்த நாளே புதிய படத்தில் நடிப்பதற்கு தனுஷ் தயாராகி விடுகிறார். ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி விடுகின்றன. ஆக, இன்றைக்கு உள்ள நடிகர்களில் இவர்தான் பெரிய அளவுக்கு பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் தனுஷ், குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 2017ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான ‘ ப பாண்டி’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ராஜ்கிரணுடன் சேர்த்து கவுண்டமணியையும் நடிக்க வைக்க அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் கவுண்டமணி, ‘வாய்மை’ படத்தில் நடித்திருந்தார். அதனை செந்தில் குமார் இயக்கி இருந்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை.

2017ஆம் ஆண்டு வெளியான ‘ப பாண்டி’ படத்தில் முதியவர் ஒருவர் தனது இளமை கால காதலியை தேடிச் செல்வார். இறுதியில் அவரது காதலியை அவர் கண்டுபிடிப்பார். ஒரு முதியவரின் காதலைப் பேசிய படம் என்பதால் குடும்பக் கதையான இந்தத் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்தப் படத்தில் நடிகை ரேவதி, சாயா சிங், பிரசன்னா, மடோனா செபாஸ்டியன் எனப் பலரும் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இந்தப் படத்தை தனுஷ், தனது ஒண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கி இருந்தார்.

தனுஷ், தற்போது ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு திருநெல்வேலி வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம் இந்த ஆண்டின் மத்தியில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com