\
"காட்டுப்பேச்சியுடன் தனுஷ்" - ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்த தனுஷ்!

"காட்டுப்பேச்சியுடன் தனுஷ்" - ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்த தனுஷ்!

"காட்டுப்பேச்சியுடன் தனுஷ்" - ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்த தனுஷ்!
Published on

காட்டுப்பேச்சியுடன் கர்ணன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் 525 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. கொடியன் குளத்தில் நடந்த கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக படத்தில் இடம் பெற்ற நாட்டார் தெய்வமான காட்டுப்பேச்சி, அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்களின் ஒருமித்த போராட்டம், விலங்குகள் மூலம் மாரிசெல்வராஜ் கதை கடத்திய பாணி என அனைத்தும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகர் தனுஷின் நடிப்பை சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அவையெல்லாவற்றுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில் தான் காட்டுப்பேச்சியுடன் இருக்கும் படத்தை பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறையின் கர்ணன் விரைவு விமர்சனத்தைப் படிக்க >> குறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com