\
’நம்மதான் நம்மள கொஞ்சம் கம்மியா நெனக்கிறோம்’..தனுஷின் திருச்சிற்றம்பலம் ட்ரெய்லர் வெளியீடு

’நம்மதான் நம்மள கொஞ்சம் கம்மியா நெனக்கிறோம்’..தனுஷின் திருச்சிற்றம்பலம் ட்ரெய்லர் வெளியீடு

’நம்மதான் நம்மள கொஞ்சம் கம்மியா நெனக்கிறோம்’..தனுஷின் திருச்சிற்றம்பலம் ட்ரெய்லர் வெளியீடு
Published on: 

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட்  18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில்,  தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆகஸ்ட் 18ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. காமெடி கலந்த ரொமான்ஸ் படமாகவும், குடும்ப பின்னணி கொண்ட கதைக் களத்தை கொண்டதாகவும் படம் இருக்கும் என ட்ரெய்லரில் தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com