\
"சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா" - மிரட்டும் ஜகமே தந்திரம் ட்ரைலர்

"சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா" - மிரட்டும் ஜகமே தந்திரம் ட்ரைலர்

"சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா" - மிரட்டும் ஜகமே தந்திரம் ட்ரைலர்
Published on: 

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'ஜகமே தந்திரம்' படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன.

2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெய்லர் யூடிப்பில் இன்று வெளியாகியுள்ளது.

'சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா' எனும் வசனத்துடன் முடியும் படத்தின் ட்ரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com