\
தனுஷின் ஜகமே தந்திரம் அப்டேட்: மூன்றாவது பாடல் 22-ஆம் தேதி வெளியீடு

தனுஷின் ஜகமே தந்திரம் அப்டேட்: மூன்றாவது பாடல் 22-ஆம் தேதி வெளியீடு

தனுஷின் ஜகமே தந்திரம் அப்டேட்: மூன்றாவது பாடல் 22-ஆம் தேதி வெளியீடு
Published on: 

தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்திலிருந்து ‘நேத்து’ என்ற பாடல் வெளியாக உள்ளது. இந்த வீடியோ பாடல் வரும் 22-ஆம் தேதி அதாவது நாளை மறுதினம் வெளியாக இருக்கிறது. 

முன்னதாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதத்தில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக படம் தள்ளிப்போனது. இதனால், ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது தியேட்டரில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதனைத்தொடர்ந்து  படம் ஜூன் 18-ல் நேரடியாக நெட் ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்படும் என்ற அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே படத்தின் டீஸரும், ’புஜ்ஜி’ என்ற  பாடலும் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இந்தப்பாடல் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 17 மொழிகளில் ஜகமே தந்திரம் படம் டப் செய்து வெளியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com