தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி, விவேக் உட்பட பலர் நடித்துள்ள படம், ’வேலை இல்லா பட்டதாரி 2’. தனுஷ் ஹீரோவாக நடித்து வசனமும் எழுதியுள்ளார். திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த். இந்தி நடிகை கஜோல் வில்லியாக நடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸும் கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தை சென்சார் குழு நேற்று பார்த்தது. பின்னர் எந்த கட்டும் இல்லாமல், யு சான்றிதழ் கொடுத்தது. வரும் 28-ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்த இந்தப் படம் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாம் வாரம் தமிழ், தெலுங்கு, இந்தியில் ரிலீஸ் ஆகிறது.