லிப்லாக் காட்சியில் கமலை ஓரங்கட்டிய தனுஷ்: ‘வடசென்னை’ டீசர்
‘வடசென்னை’ படத்தின் டீசரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வடசென்னை’. இந்தப் படம் ஒரு ப்ரீயட் ஃபிலிம். வடசென்னை மக்களின் ஒரு காலகட்ட வாழ்கையை பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, வெற்றிமாறன், ராதாரவி என பலர் நடித்துள்ளனர். இன்று தனுஷின் பிறந்தநாளையொட்டி படத்தின் டீசர் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது படக்குழு. அந்த அறிப்புக்கு ஏற்ப தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்டுள்ளார். டீசர், வெற்றிமாறனின் ஸ்டைலை அப்படியே மீண்டும் நிரூபித்திருக்கிறது.
தனுஷ் ‘பக்கா’ வடசென்னை மனிதராக உருவெடுத்திருக்கிறார். ‘ஒருத்தன் செத்தா முடியுற சண்டையாக்கா இது’ என குரூர மொழியில் தனுஷ் உச்சரிக்கும் டயலாக் ‘அஃமார்க்’ அடித்தட்டு மக்களின் குரலை பதிய வைத்திருக்கிறது. கூடவே போலீஸ் கலவரத்தின் இடையே ‘திருப்பி அடிக்கலையினா இவங்க நம்மல அடிச்சு ஓடவிட்டுக்கிட்டே இருப்பானுங்க’ என்கின்ற வசனம் பல அரசியல் ‘பொடி’களை முன் வைத்து செல்கிறது. டீசரில் ஹைலைட் என்ன? இல்லாமல் இருக்குமா? ஐஸ்வர்யா ராஷேஷூம் தனுஷூம் அடிக்கும் லிப்லாக் சீன் கமலை ஓவர்டேக் செய்யும் விதமாக அமைந்துள்ளது. நிச்சயம் லிப்லாக் காட்சிகாக இந்த டீசர் வைரலாக பரவும் என்று உறுதியாக நம்பலாம்.
இந்நிலையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய கனவு புராஜெட். அனைவரின் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் எனது நேர்மையான நன்றிகளை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். ரசிகர்கள்தான் என் பலம். உங்கள் அனைவருக்கும் என் அன்புகள்” என்று கூறியிருக்கிறார்.