\
அடுத்தடுத்து வெளியாகும் தனுஷ் திரைப்படங்கள் - ‘வாத்தி’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அடுத்தடுத்து வெளியாகும் தனுஷ் திரைப்படங்கள் - ‘வாத்தி’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அடுத்தடுத்து வெளியாகும் தனுஷ் திரைப்படங்கள் - ‘வாத்தி’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

நடிகர் தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில், தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ என்றும் பெயரிடப்பட்டுள்ள படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், மொட்டை ராஜேந்திரன், பிரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் ஆசிரியராக நடிக்கிறார். கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவராகவும், மாஃபியா கும்பலை எதிர்த்து போராடுபவராகவும் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் மாதம் 2-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியிட உள்ளதாக புதிய போஸ்டருடன் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனுஷின் ‘கிரே மேன்’, ‘திருச்சிற்றம்பலம்’ படங்களைத் தொடர்ந்து ‘நானே வருவேன்’ திரைப்படம் வருகிற 29-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், ‘வாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி அவரின் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com