தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவை சந்தித்த தனுஷ்

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவை சந்தித்த தனுஷ்
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவை சந்தித்த தனுஷ்

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவை இன்று சந்தித்திருக்கிறார் நடிகர் தனுஷ். இவரும் இணைந்து புதிய படம் ஒன்றி பணியாற்றவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

தெலுங்கின் முன்னணி இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு, தனுஷ் அமெரிக்காவில் இருக்கும்போதே சமீபத்தில் வெளியானது. கடந்த இரண்டு மாதங்களாக ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருந்த தனுஷ் தற்போது ஐதராபாத்தில் கார்த்திக் நரேனின் ‘டி43’ படத்தில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில், படப்பிடிப்பில் கலந்துகொண்டே இயக்குநர் சேகர் கம்முலாவையும், தயாரிப்பாளர் நாராயணன் தாஸ் நரங்கையும் இன்று தனுஷ் சந்தித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ‘டாலர் ட்ரீம்ஸ்’ படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை சேகர் கம்முலா வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2007 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த ‘ஹேப்பி டேஸ்’ படத்தையும் இவர்தான் இயக்கியிருக்கிறார். இப்படம் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் தமிழில் ‘இனிது இனிது’ என்று ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. சேகர் கம்முலா தனது படங்களுக்காக இதுவரை 5 முறை சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் 4 முறை நந்தி விருதுகளையும் குவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com