தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஓடிடி ரிலீஸ் எப்போது? - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஓடிடி ரிலீஸ் எப்போது? - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஓடிடி ரிலீஸ் எப்போது? - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

நடிகர் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 4-வது முறையாக கூட்டணி அமைத்து நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. காதல், பாசம், கோபம், தந்தை -மகன், தாத்தா - பேரன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைத்து தயாரிக்கப்பட்டு, கடந்த மாதம் 18-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சன்பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. அனிருத்தின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்ததால், படம் எதிர்பார்த்ததைவிட வரவேற்பு பெற்றது.

இதன் காரணமாக ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 15 நாட்களிலேயே 110 கோடி ரூபாய் வசூலித்தது. விக்ரமின் ‘கோப்ரா’ படத்தால், ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் வசூல் பாதிக்கும் என்று கூறப்பட்டநிலையிலும் கூட ‘கோப்ரா’ படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால், தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

இந்நிலையில் இந்தப் படம் வரும் 23-ம் தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்பட 4 மொழிகளில் இந்தப் படம் வெளியிடப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com