‘மொத்தத்துல அவதான் தாய்கிழவி’ - தனுஷின்  ‘திருச்சிற்றம்பலம்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

‘மொத்தத்துல அவதான் தாய்கிழவி’ - தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

‘மொத்தத்துல அவதான் தாய்கிழவி’ - தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
Published on

தனுஷ் எழுதி, பாடியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘தாய் கிழவி’ இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு 4-வது முறையாக இயக்குநர் மித்ரன் ஜவஹருடன், தனுஷ் இணைந்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இறுதிக்கட்ட பணிகளில் உள்ள இந்தப் படம், நடிகர் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28-ம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.

சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் தனுஷுடன், அனிருத் கூட்டணி அமைத்து இசையமைத்துள்ளார். இதனால் எதிர்பார்ப்பு எகிறி வந்தது. ஏனெனில் அனிருத் - தனுஷ் கூட்டணியில் உருவான ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடல் பட்டிதொட்டியெங்கும் வரவேற்பு பெற்ற நிலையில், யூ-ட்யூப் தளத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வந்தது. இதையடுத்து ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இவர்கள் மீண்டும் இணைந்து ‘தாய் கிழவி’ என்ற பாடலை உருவாக்கியுள்ளதாக அறிவிப்பு வெளியானது முதல் அந்த்ப் பாடல் குறித்த அறிவிப்பு ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது.

இந்நிலையில்அனிருத் இசையமைப்பில், ‘தாய் கிழவி’ பாடல் வரிகளை எழுதி, பாடியுள்ளார் தனுஷ். அந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ யூ-ட்யூப் தளத்தில் இன்று மாலை வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது. உங்களுக்காக அந்த வீடியோ இதோ....

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com