\
வைரலாகும் ‘மேகம் கருக்காதா’ மேக்கிங் வீடியோ - அமோக வரவேற்புக்கு நன்றி தெரிவித்த ஜானி!

வைரலாகும் ‘மேகம் கருக்காதா’ மேக்கிங் வீடியோ - அமோக வரவேற்புக்கு நன்றி தெரிவித்த ஜானி!

வைரலாகும் ‘மேகம் கருக்காதா’ மேக்கிங் வீடியோ - அமோக வரவேற்புக்கு நன்றி தெரிவித்த ஜானி!
Published on

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்கதா’ பாடல் உருவான விதத்தை பகிர்ந்து, அமோக வரவேற்பு தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடன இயக்குநர் ஜானி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளியான படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி அங்கும் நல்ல பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக படத்தில் இடம் பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடல் பெரிய ஹிட்டானது. படத்தில் இந்தப் பாடலின் நடன அமைப்பும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. ட்விட்டர், இன்ஸ்டா என இந்தப் பாடலின் கவர் வெர்ஷனுக்கு ரசிகர்கள் பலரும் நடனமாடி வீடியோ பகிரும் அளவிற்கு ரீச் ஆனது.

தற்போது இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த மேக்கிங் வீடியோவை டான்ஸ் மாஸ்டர் ஜானி ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். தனுஷுக்கு அவர் நடன அசைவுகளை சொல்லித் தரும் இந்த வீடியோ இப்போது ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com