\
‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா - வைரலாகும் வீடியோ, புகைப்படங்கள்

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா - வைரலாகும் வீடியோ, புகைப்படங்கள்

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா - வைரலாகும் வீடியோ, புகைப்படங்கள்
Published on

நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும்நிலையில், அந்த விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷுடன் 4-வது முறையாக இயக்குநர் மித்ரன் ஜவஹர் கூட்டணி அமைத்து உருவாகியுள்ளப் படம் ‘திருச்சிற்றம்பலம்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு தனுஷின் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் 3 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், செல்வராகவன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜா, தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, அனிருத், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். தொகுப்பாளரும், நடிகருமான மிர்ச்சி சிவா, விழாவை தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் இந்த இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

இந்நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் சில உங்களுக்காக..

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com