மிரட்டலாக வெளியான தனுஷின் ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் - அதிரவிடும் ரசிகர்கள்

மிரட்டலாக வெளியான தனுஷின் ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் - அதிரவிடும் ரசிகர்கள்
மிரட்டலாக வெளியான தனுஷின் ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் - அதிரவிடும் ரசிகர்கள்

நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’, ‘கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’ போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் ஹாலிவுட் படம்‘தி கிரே மேன்’. இந்தப் படத்தில் ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார்.

இந்தப் படத்தை பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ஃபிளிக்ஸ், சுமார் 1500 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. வரும் ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளது. நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

அதிரடி ஆக்ஷன் மற்றும் சேஸிங் காட்சிகளால் நிறைந்த ட்ரெய்லர் மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ட்ரெய்லரில் ஒரு சில விநாடிகளே நடிகர் தனுஷ் தோன்றினாலும், அவரது காட்சி மிரட்டலாக உள்ளது. இதனால் அவரது ரசிகர்களுக்கு நீண்ட நாட்கள் கழித்து தரமான சம்பவம் காத்திருப்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. இதையடுத்து அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com