\
‘பொன்னியின் செல்வன்’ படத்தோடு மோதும் தனுஷின் ‘நானே வருவேன்’? - வெளியான தகவல்

‘பொன்னியின் செல்வன்’ படத்தோடு மோதும் தனுஷின் ‘நானே வருவேன்’? - வெளியான தகவல்

‘பொன்னியின் செல்வன்’ படத்தோடு மோதும் தனுஷின் ‘நானே வருவேன்’? - வெளியான தகவல்
Published on

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் படம் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘மயக்கம் என்ன’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் 11 ஆண்டுகள் கழித்து தனுஷ், செல்வராகவன் இணைந்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். நடிகர் தனுஷ் - இயக்குநர் செல்வராகவன் கூட்டணி, ஏற்கெனவே 3 வெற்றிப் படங்களை தந்த நிலையில், 4-வது முறையாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

இதனால், ‘நானே வருவேன்’ படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் வருகிற 11-ம் தேதி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் வருகிற 30-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com