தனுஷின் ‘நானே வருவேன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு - படக்குழு வெளியிட்ட தகவல்

தனுஷின் ‘நானே வருவேன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு - படக்குழு வெளியிட்ட தகவல்

தனுஷின் ‘நானே வருவேன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு - படக்குழு வெளியிட்ட தகவல்
Published on

நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘திருச்சிற்றம்பலம்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’. செல்வராகவன் இயக்கியுள்ள இந்தப் படத்தை, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் சீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்தப் படம் வருகிற 29-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

We are extremely happy to announce that #NaaneVaruvean is releasing worldwide on September 29th! @dhanushkraja @selvaraghavan @thisisysr @theedittable @omdop @Rvijaimurugan @saregamasouth pic.twitter.com/nUMH73nVPr

இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம் இந்தப் படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமாகிறார். 2 மணிநேரம் 15 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்று சொல்லப்படுகிறது. தனுஷின் ‘வாத்தி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நேற்று வெளியானநிலையில், இன்று ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com