தனுஷின் ’நானே வருவேன்’: அப்டேட் கொடுத்த செல்வராகவன்
தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் அப்டேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
செல்வராகவன் – தனுஷ் கூட்டணி "மயக்கம் என்ன" படத்திற்கு அடுத்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு ’நானே வருவேன்’ படத்தில் இணைந்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரிப்பில் இப்படத்தின் அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. ஆனால், இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. தனுஷ் நடிப்பில் ஏப்ரல் மாதம் ‘கர்ணன்’ வெளியானது, கடந்த வாரம் ‘ஜகமே தந்திரம்’ வெளியானது. ஆனால், இப்படங்களின் புரொமொஷனுக்காக தனுஷ் தமிழகம் வரவில்லை. தற்போதுவரை ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்புக்காக குடும்பத்தினருடன் அமெரிக்காவில் இருக்கிறார்.
இந்த நிலையில், ’வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் நானே வருவேன்’ படத்தின் ஷூட்டிங் தொடங்கும்’ என்று இயக்குநர் செல்வராகவன் தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்திருக்கிறார்.