\
‘நானே வருவேன்’ டீசர் மற்றும் தெலுங்கு டைட்டில் குறித்து வெளியான தகவல்

‘நானே வருவேன்’ டீசர் மற்றும் தெலுங்கு டைட்டில் குறித்து வெளியான தகவல்

‘நானே வருவேன்’ டீசர் மற்றும் தெலுங்கு டைட்டில் குறித்து வெளியான தகவல்
Published on

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் டீசர் நாளை வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘மயக்கம் என்ன’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் 11 ஆண்டுகள் கழித்து தனுஷ், செல்வராகவன் இணைந்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். நடிகர் தனுஷ் - இயக்குநர் செல்வராகவன் கூட்டணி, ஏற்கெனவே 3 வெற்றிப் படங்களை தந்த நிலையில், 4-வது முறையாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

இதனால், ‘நானே வருவேன்’ படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. மேலும் வருகிற 29-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில், நாளை படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆந்திர மாநிலம் முழுவதும் வெளியிடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ‘நேனே வஸ்துன்னா’ எனவும் தெலுங்கில் பெயரிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com