புதிய போஸ்டருடன் வெளியான தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் சென்சார் தகவல்

புதிய போஸ்டருடன் வெளியான தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் சென்சார் தகவல்
புதிய போஸ்டருடன் வெளியான தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் சென்சார் தகவல்

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கியுள்ள ‘நானே வருவேன்’ படத்தை, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் சீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் வருகிற 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தோடு இந்தப் படம் மோதவுள்ளநிலையில், இந்தப் படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை புதிய போஸ்டருடன் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டரில் தனுஷ் மலை உச்சியில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கிறார். 

இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம் இந்தப் படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள தனுஷின் ‘வாத்தி/சர்’ வருகிற டிசம்பர் 2-ம் தேதி வெளியாகவுள்ளநிலையில், அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அடுத்தடுத்து தனுஷ் படத்தின் அப்டேட்டுகள் வெளிவருவதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com