‘வடசென்னை’ படப்பிடிப்பு நிறைவு நாளில் நடிகர் தனுஷ் கலந்து கொள்ளவில்லை.
வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ திரைப்படம் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இன்னும் முடிந்த பாடில்லை. இந்தப் படத்தின் தனுஷ் பகுதிகள் மட்டும் மிக வேகமாக படமாக்கப்பட்டுவிட்டன. ஆனால் இதர பகுதிகளின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையவில்லை. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘வடசென்னை’ படப்பிடிப்பு சம்பந்தமாக அவர் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் தனது முதல் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆக, இவரது அடுத்த பகுதி இனிமேல்தான் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இதனால் படத்தின் வெளியீடு மேலும் தள்ளப் போக உள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தின் திரைக்கதை கேங்ஸ்டர் ட்ராமா பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பழமையான வடசென்னையை உருவாக்க வேண்டி உள்ளதால் அதிக காலதாமதமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த கொண்டாட்டத்தில் தனுஷால் பங்கேற்க முடியவில்லை.