\
மாரி 2வின் டைட்டில் லோகோ வெளியீடு

மாரி 2வின் டைட்டில் லோகோ வெளியீடு

மாரி 2வின் டைட்டில் லோகோ வெளியீடு
Published on

மாரி 2வின் டைட்டில் லோகோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

2015-ஆம் ஆண்டு வெளியான மாரி படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை அடைந்ததை அடுத்து தற்சமயம் மாரி 2 எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்க உள்ளது. இதில் நாயகியாக சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். மேலும் நடிகர் கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதால் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இதனை தனுஷ் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வோண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகவிருக்கிறது. 

இந்நிலையில், படத்தின் டைட்டில் லோகோவை புத்தாண்டு பரிசாக நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டைட்டில் லோகோ தனுஷ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை அடைந்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com