\
நாளை காலை வெளியாகும் தனுஷின் ’ஜகமே தந்திரம்’ ட்ரைலர்

நாளை காலை வெளியாகும் தனுஷின் ’ஜகமே தந்திரம்’ ட்ரைலர்

நாளை காலை வெளியாகும் தனுஷின் ’ஜகமே தந்திரம்’ ட்ரைலர்
Published on: 

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரைலர் நாளை காலை வெளியாகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகிறது. கடந்த பிப்ரவரி 22 ஆம் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த வாரம் இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி கவனம் ஈர்ததது.

படம் ஜூன் 18 ஆம் தேதி வெளியாவதால், ஜூன் 1 ஆம் தேதி ட்ரைலர் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என்று சமீபத்தில் படக்குழு அறிவித்தது. தற்போது, நாளை காலை 10 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் நேரத்தை அறிவித்துள்ளார்கள். இதனால், தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை பல தமிழ் திரைப்படங்கள் ஓ.டி.டியில் வெளியானாலும் அதிக மொழிகளில் டப் செய்யப்படவில்லை. முதன்முறையாக ஜகமே தந்திரம் 17 மொழிகளில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com