\
'செம்ம ஸ்டைலில் தனுஷ்' - நாளை வெளியாகும் ’தனுஷ்43’ ஃபர்ஸ்ட் லுக்

'செம்ம ஸ்டைலில் தனுஷ்' - நாளை வெளியாகும் ’தனுஷ்43’ ஃபர்ஸ்ட் லுக்

'செம்ம ஸ்டைலில் தனுஷ்' - நாளை வெளியாகும் ’தனுஷ்43’ ஃபர்ஸ்ட் லுக்
Published on

’தனுஷ் 43’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ’தனுஷ் 43’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில், நடித்துக்கொண்டிருக்கும்போதே, ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்புகளுக்காக அமெரிக்கா சென்றார் தனுஷ். அவர், நடிப்பில் ஏப்ரல் மாதம் ‘கர்ணன்’ வெளியானது, சமீபத்தில் ‘ஜகமே தந்திரம்’ வெளியானது. ஆனால், இப்படங்களின் புரோமோஷனுக்காகக்கூட தனுஷ் தமிழகம் வரவில்லை.

இந்த நிலையில் ஜூலை முதல்வாரத்தில் ஹைதராபாத் வந்த தனுஷ், ‘தனுஷ் 43’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். தற்போது, படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், நாளை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இன்று வெளியிட்டுள்ள ப்ரோமோ வீடியோவில்,  மங்கலான ஒளியில் புல்லட்டின் மீது தனுஷ் படுத்துக்கொண்டிருப்பது செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் இருப்பதாகவும் எதிர்பார்ப்பை அதிகரித்திருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்திட்டு வருகிறார்கள். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com