\
தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம் -புகைப்படங்களை பகிர்ந்த படக்குழு

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம் -புகைப்படங்களை பகிர்ந்த படக்குழு

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம் -புகைப்படங்களை பகிர்ந்த படக்குழு
Published on

நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மிக நீண்ட காலமாக பேச்சுவார்த்தையில் இருந்த தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. ‘ராக்கி’, ‘சாணிக்காயிதம்’ ஆகியப் படங்களை இயக்கி அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘கே.ஜி.எஃப்.’ படம் போன்று ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் எடுக்கவுள்ளதாகவும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்காக நடிகர் தனுஷ் புதிய லுக்கில் வலம் வருகிறார்.

இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்தப்படம் 1930-கள் மற்றும் 40-களில் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாக வைத்து பீரியட் படமாக எடுக்கப்பட உள்ளது. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்தப் படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பலரும் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com