\
அசுரன் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு

அசுரன் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு

அசுரன் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு
Published on: 

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘அசுரன்’ திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகிய பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. 

அந்த வரிசையில் மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘அசுரன்’. இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி, பவன், இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி.பிராகாஷ் குமார் இசையமைக்கிறார். 

பூமணி எழுதிய ‘‘வெக்கை’’ நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தினை வி கிரியேஷன், கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் இராண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் ஒரு போஸ்டரில் ரெட்ரோ லுக்கிலும் மற்றொன்றில் ஆக்ரோஷமாகவும் தோன்றுகிறார் தனுஷ்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com