நடிகர் தனுஷின் ‘வாத்தி’ பட அப்டேட் - வெளியான தகவல்

நடிகர் தனுஷின் ‘வாத்தி’ பட அப்டேட் - வெளியான தகவல்

நடிகர் தனுஷின் ‘வாத்தி’ பட அப்டேட் - வெளியான தகவல்
Published on

நடிகர் தனுஷ் ‘நானே வருவேன்‘ படப்பிடிப்பை முடித்துள்ளநிலையில், அடுத்ததாக ‘வாத்தி’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தனக்கென ஓர் இடத்தை வைத்திருப்பவர் நடிகர் தனுஷ். இவர், தற்போது இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு உதகையில் நடந்துவந்தநிலையில், நேற்று படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ’சார்‘ என்றும் பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். 

இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை பிரபல தெலுங்கு திரையுலக இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் ஆசிரியராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவராகவும், மாஃபியா கும்பலை எதிர்த்து போராடுபவராகவும் நடிகர் தனுஷ் நடித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com