\
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷ்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷ்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷ்
Published on

தனுஷின் ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். இதில் தனுஷூக்கு ஜோடியாக மேகா அகாஷ் நடித்து வருகிறார். இவரது கதாப்பாத்திரத்திற்கு லேகா என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ரானா டகுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் டீசர் ஒன்று கடந்த டிசம்பரில் வெளியானது. அந்த டீசர் த்ரில், சஸ்பென்ஸ் உடன்  ரொமான்ஸ் கலந்த படமாக இது தயாராகி வருகிறது என்பதை லேசாக உணர்த்தியிருந்தது. ஆரம்பிக்கப்பட்ட உடனேயே இந்தப் படத்தின் வேலைகள் மிக வேகமாக நடைப்பெற்று வந்தன. அதே வேகத்தில் வேலைகள் சென்றிந்தால் படம் முன்பே திரைக்கு வந்திருக்கும். ஆனால் இடையில் இரண்டு குதிரைகளில் கெளதம் சவாரி செய்தார். அதாவது ஒரே நேரத்தில் இரண்டு பட வேலைகளை செய்து வந்தார். ஆகவே தனுஷ் படத்தின் பணிகள் கொஞ்சம் பாதிப்பு அடைந்தன. இந்நிலையில் இதன் இறுதிக் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com