சினிமா
கேன்ஸ் விழாவில் தனுஷ் வெளியிட்ட ‘அஸ்தி’ போஸ்டர்
கேன்ஸ் விழாவில் தனுஷ் வெளியிட்ட ‘அஸ்தி’ போஸ்டர்
நடைபெற்று முடிந்த கேன்ஸ் 2018 விழாவில் நடிகர் தனுஷ் ‘அஸ்தி’ பட போஸ்டரை வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.
தன் வாழ்வில் முதன்முறையாக நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். அவரது ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர் படத்திற்காக அவர் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ்2018 பட விழாவிற்கு சென்றிருந்தார். அங்கே ‘வாழ்க்கையை தேடி நானும் போனேன்’என்ற தமிழ்ப் பட தலைப்பையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கேன்ஸ் விழாவில் தனுஷ் நடிகை அந்தராராவ் நடித்து தின்கர் ராவ் இயக்கியுள்ள ‘அஸ்தி’ படத்தின் குட்டிப் போஸ்டரை வெளியிட்டு சிறப்பித்துள்ளார். அதற்கான படங்கள் சமூக வலைத்தளமான ட்விட்டரில் வெளியாகி உள்ளது.