விஷால் நடித்துவரும் ‘சண்டக்கோழி 2’ படத்தில் தனுஷ் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.
2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘சண்டக்கோழி’. விஷாலுக்கு ஆக்ஷன் ஹீரோவாக அடையாளத்தை ஏற்படுத்திய படம். மீரா ஜாஸ்மின் மற்றும் ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் மாபெரும் வெற்றியை ஈடியது. ஆகவே அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
முதலில் இதில் விஷால் நடிக்கப்போவதில்லை என செய்தி வெளியான நிலையில் மீண்டும் சமரசம் செய்யப்பட்டு படப்பிடிப்புக்கு கிளம்பியது படக்குழு. இதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். மேலும் ராஜ்கிரண், சூரி ஆகியோர் நடிக்கின்றனர். இதை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காக தனுஷ் ஒரு பாடலைப் பாடி தந்துள்ளார். இப்பாடல் நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது.