அடுத்த ஆண்டு மத்தியில் துவங்கும் தனுஷ் - ராம்குமார் படத்தின் படப்பிடிப்பு

அடுத்த ஆண்டு மத்தியில் துவங்கும் தனுஷ் - ராம்குமார் படத்தின் படப்பிடிப்பு
அடுத்த ஆண்டு மத்தியில் துவங்கும் தனுஷ் - ராம்குமார் படத்தின் படப்பிடிப்பு

தனுஷ் - ராம்குமார் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மித்ரன் ஜவகரின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, செல்வராகவனின் ‘நானே வருவேன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். ஆனால், ‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு ராம்குமார் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’ராட்சசன்’ அந்த ஆண்டு வசூல் சாதனை செய்த படங்களில் ஒன்று. யூகிக்கவே முடியாத விறுவிறுப்பான திரைக்கதையால் பாராட்டுக்களைக் குவித்தார் இயக்குநர் ராம்குமார்.முன்னதாக அவர் எடுத்த 'முண்டாசுப்பட்டி' திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் இரண்டுப் படங்களின் வெற்றியால் தனுஷுடன் இயக்குநர் ராம்குமார் கைகோத்தார்.

ஆனால், இப்போதுவரை எவ்வித அப்டேட்டும் வெளியாகவில்லை. இப்படத்திற்கு நீண்ட நாட்கள் கால்ஷீட் ஒதுக்கவேண்டும் என்பதால் தனுஷ் இந்தப் படங்களை முடித்தப்பிறகு ராம்குமாரின் படத்தில் இணையவிருக்கிறார் என்றும் 2022 ஆம் ஆண்டு மத்தியில் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், இப்படத்திற்கு ‘வால் நட்சத்திரம்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com