'ராட்சசன்' புகழ் ராம்குமாருடன் தனுஷ் கைகோக்கும் ’வால் நட்சத்திரம்’?

'ராட்சசன்' புகழ் ராம்குமாருடன் தனுஷ் கைகோக்கும் ’வால் நட்சத்திரம்’?
'ராட்சசன்' புகழ் ராம்குமாருடன் தனுஷ் கைகோக்கும் ’வால் நட்சத்திரம்’?

'ராட்சசன்' புகழ் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘வால் நட்சத்திரம்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’ராட்சசன்’ அந்த ஆண்டு வசூல் சாதனை செய்த படங்களில் ஒன்று. ட்விஸ்ட் அடித்து யூகிக்கவே முடியாத விறுவிறுப்பான திரைக்கதையால் பாராட்டுக்களைக் குவித்தார் இயக்குநர் ராம்குமார்.

முன்னதாக அவர் எடுத்த 'முண்டாசுப்பட்டி' திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் இரண்டுப் படங்களின் வெற்றியால் தனுஷுடன் இயக்குநர் ராம்குமார் கைகோத்தார். 

இந்நிலையில், இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 'அட்ராங்கி ரே', மாரி செல்வராஜின் 'கர்ணன்' படத்தில் நடித்துவரும் தனுஷ் அடுத்ததாக, கார்த்திக் நரேன், ஜவகர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில்தான், ராம்குமாருடன் தனுஷ் இணையும் படத்தின் தலைப்பு ‘வால் நட்சத்திரம்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வானில் எப்போதாவது தோன்றும் வால் நட்சத்திரத்தை அந்தக் காலத்தில் மக்களும் மன்னர்களும் அபசகுணமாகப் பார்த்தார்கள். அறிவியல் ரீதியாக ஆராய்ந்தபோதும் வால்நட்சத்திரங்கள் தோன்றும்போது, அதன் துகள்கள் பட்டு நோய்கள் உண்டாகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்தார்கள். தனுஷின் 'வால் நட்சத்திரம்' என்ன அதிர்வை உண்டாக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com