வெப்சீரிஸில் களமிறங்கும் தனுஷ்!

வெப்சீரிஸில் களமிறங்கும் தனுஷ்!
வெப்சீரிஸில் களமிறங்கும் தனுஷ்!

வடசென்னை படத்தை முடித்துவிட்டு தனுஷ் வெப்சீரிஸ் தயாரிப்பில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். 

நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல அவதாரங்களை திரையுலகில் எடுத்து வருகிறார் தனுஷ். மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள வெப்சீரிஸில் பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் தற்போது தனுஷின் கவனமும் வெப்சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில் "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெப் சீரியல்களை தயாரிக்கும் திட்டம் இருந்தது. இதற்காக செயலி ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டு இருந்தோம். ஆனால் விஐபி-2 படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தியதால் தற்காலிகமாக அந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம். அந்தத் திட்டத்தை மீண்டும் கையில் எடுத்து அடுத்த ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம்’ எனத் தெரிவித்தார். தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படப்பிடிப்பிலும், ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com