தனுஷ் பகிர்ந்து கொண்ட ஷாருக்கானின் ‘ஜீரோ’ டீசர்
நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாருக்கானின் ‘ஜீரோ’டீசரை பகிர்ந்து கொண்டு வாழ்த்தியிருக்கிறார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘ஜீரோ’.இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்தப் படத்தை தனுஷ் நடித்த 'அம்பிகாபதி', மாதவன் நடித்த 'தனு வெட்ஸ் மனு' படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் எல்.ராய் இயக்கி உள்ளார். இந்தப்படத்தில் அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். அதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ‘அபூர்வ சகோதரர்கள்’படத்தில் கமல்ஹாசன் குள்ளமாக நடித்திருந்ததைபோல ஷாருக்கானும் நடித்துள்ளர். மேலும் இந்தப் படத்தில் சல்மான்கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். 10 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கானும் சல்மான் கானும் இணைந்து நடித்துள்ளதால் ‘ஜீரோ’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தின் டீசரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அதில், “புதிய படம் ‘ஜீரோ’வின் டீசர். கம்பீரமான ஷாருக்கான் மற்றும் ஆனந்த் எல் ராய் உடையது. அவர்களை அணைத்து கொள்கிறேன். ஆல் தி பெஸ்ட். மேலும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.