\
நாளை வெளியாகிறதா தனுஷின்  ‘ஜகமே தந்திரம்’ டீஸர்?

நாளை வெளியாகிறதா தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ டீஸர்?

நாளை வெளியாகிறதா தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ டீஸர்?
Published on: 

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள  ‘ஜகமே தந்திரம்’ படத்தின் டீஸர் நாளை வெளியாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாக இருக்கிறது. 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள தனுஷின் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது தள்ளிப் போனது. முன்னதாக படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதாக ரசிகர்களுக்கு உறுதியளித்த 'ஜகமே தந்திரம்' தயாரிப்பாளர் படத்தை ஓடிடி தளத்துக்கு விற்றதாக தகவல்கள் கசிந்தது. ஆனால் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் விரும்பவில்லை என கூறப்படுகிறது. தமிழக அரசும் அண்மையில் தியேட்டர்களில் 100 சதவித இருக்கைக்கு அனுமதியளித்துள்ளது.

ஜகமே தந்திரம் படம் தியேட்டரிலா அல்லது ஓடிடியிலா என்ற பேச்சுகள் பல தரப்பில் அடிபட்டு வந்த நிலையில், தனுஷூம் எனது ரசிகர்கள் போலவே ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டார். இந்நிலையில் தற்போது ஜகமே தந்திரம் படத்தின் டீஸர் நாளை நெட்ப்ளிக்ஸில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com