சினிமா
த்ரில்லர் ஹாலிவுட் திரைப்படத்தில் ‘அவெஞ்சர்ஸ்‘ இயக்குநர்களுடன் கைகோக்கும் தனுஷ்
த்ரில்லர் ஹாலிவுட் திரைப்படத்தில் ‘அவெஞ்சர்ஸ்‘ இயக்குநர்களுடன் கைகோக்கும் தனுஷ்
அவெஞ்சர்ஸ் திரைப்பட இயக்குநர்களின் அடுத்த படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
கேப்டன் அமெரிக்கா, விண்டர் சோல்ஜர், சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார் மற்றும் எண்ட் கேம் உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களை அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ இயக்கியுள்ளனர்.
இவர்கள் அடுத்ததாக நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு 'தி க்ரே மேன்' என்ற படத்தை இயக்குகின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் முதன்மை கதாபாத்திரத்தில் க்றிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் நடிக்கின்றனர். த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.