"பெருமித தருணம்!"- 'அவெஞ்சர்ஸ்' இயக்குநர்கள் படத்தில் தனுஷு... பிரபலங்களின் வாழ்த்து!

"பெருமித தருணம்!"- 'அவெஞ்சர்ஸ்' இயக்குநர்கள் படத்தில் தனுஷு... பிரபலங்களின் வாழ்த்து!
"பெருமித தருணம்!"- 'அவெஞ்சர்ஸ்' இயக்குநர்கள் படத்தில் தனுஷு... பிரபலங்களின் வாழ்த்து!

'அவெஞ்சர்ஸ்' திரைப்பட இயக்குநர்களின் அடுத்த படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

'கேப்டன் அமெரிக்கா', 'விண்டர் சோல்ஜர்', 'சிவில் வார்', 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' மற்றும் 'எண்ட் கேம்' உள்ளிட்ட பிரமாண்ட திரைப்படங்களை அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ இயக்கியுள்ளனர்.

இவர்கள் அடுத்ததாக நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு 'தி க்ரே மேன்' என்ற படத்தை இயக்குகின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால், தனுஷுக்கு சினிமா பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகிறார்கள்.

நடிகர் அஷோக் செல்வன், “நீங்கள் எப்போதும் எனது இன்ஸ்பிரேஷன். இந்த செய்தி எனது இன்றைய நாளை சிறந்ததாக்கியது” என்று உற்சாகமுடன் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் வைபவ் “வாட் ஏ… கிரேட் நியூஸ். சென்னைவாசி என்பதி மிகவும் பெருமையாக உள்ளது” என்று உணர்வுபூர்வமுடன் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு “காலை எழுந்தவுடன் நல்ல செய்தி கிடைத்துள்ளது. மிகவும் பெருமையாக உள்ளது” என்று வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

நடிகை ராதிகா சரத்குமார் “ஆசம். வாழ்த்துகள் தனுஷ்” என்றும், நடிகை பிரியா பவானிசங்கர் “உங்கள் திரைப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல். பெருமையாக இருக்கிறது சார்” என்றும்  மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளனர்.

பாடலாசிரியர் விவேக் “இது மனதை கவரும் செய்தி. தமிழகம் மற்றும் இந்தியாவிலிருந்து உங்களுக்கு நிறைய அன்பை அனுப்புகிறோம். பெருமையாக இருக்கிறது. வாழ்த்துகள் சார்” பாராட்டியிருக்கிறார்.

தனுஷின் அக்கா கார்த்திகா “2021 ஆம் ஆண்டின் அற்புதமான தொடக்கம். பெருமையாக இருக்கிறது தம்பி” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, திவ்யதர்ஷினி, நடிகர் பிரசன்னா, நடிகர் சாந்தனு பாக்யராஜ், நடிகை அதுல்யா ரவி என மேலும் சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com