'அசுரன் / ஆக்டர்' - ட்விட்டரில் பயோவை மாற்றிய தனுஷ்!

'அசுரன் / ஆக்டர்' - ட்விட்டரில் பயோவை மாற்றிய தனுஷ்!

'அசுரன் / ஆக்டர்' - ட்விட்டரில் பயோவை மாற்றிய தனுஷ்!
Published on

நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் 'அசுரன் / ஆக்டர்' என்று மாற்றியிருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆண்டு வெளியான ’அசுரன்’ வசூல் சாதனை செய்ததோடு, தனுஷின் சிறந்த நடிப்பிற்காக பாராட்டுக்களையும் குவித்தது. தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம், பசுபதி உள்ளிடோர் நடிப்பில் போட்டிப்போட்டுக்கொண்டு நடித்தார்கள். எழுத்தாளர் பூமணியின் ’வெக்கை’ நாவல் கதையை திரையில் காட்சிகளாக ரசிக்க வைத்தார் வெற்றி மாறன்.

தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு ‘நடிப்பு அசுரன்’ என்றே புகழத் தொடங்கினார்கள். ’சிவசாமி’ என்ற கேரக்டரில் தனுஷ் வாழ்ந்தார் என்றே ஊடகங்கள் பாராட்டின.

ஏற்கெனவே ஊடகங்களின் பல்வேறு விருதுகள், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான படம் போன்ற பல்வேறு சிறப்புக்களை ’அசுரன்’ பெற்றிருக்கிறது. தெலுங்கிலும் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் ’நரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இவ்வளவு பாராட்டுக்களை குவித்துள்ள நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில் பயோவை “ASURAN/Actor” என்று பெருமையுடன் மாற்றியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com