‘தோழி ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துக்கள்’ - வைரலாகும் தனுஷின் ட்வீட்

‘தோழி ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துக்கள்’ - வைரலாகும் தனுஷின் ட்வீட்
‘தோழி ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துக்கள்’ - வைரலாகும் தனுஷின் ட்வீட்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள பயணி பாடல் வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நடிகர் தனுஷ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், கதையாசிரியர், இயக்குநர் என திரையுலகின் பல துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் தனுஷ் தற்போது ஹாலிவுட்டில் தி கிரே மேன் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் மியூசிக் வீடியோ ஒன்றை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வந்தார். அந்த மியூசிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

இதையடுத்து தென்னிந்தியாவைச் சேர்ந்த மோகன்லால், சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அதனை பகிர்ந்து, வாழ்த்துக்களை தெரிவித்தநிலையில், தனுஷும் அந்த ட்வீட்டை பகிர்ந்துள்ளார். அதில், ‘உங்களுடைய பயணி மியூசிக் வீடியோவிற்கு எனது வாழ்த்துக்கள் தோழி. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடித்த ‘மாறன்’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த 20-ம் தேதி வெளியாகியது. பட வெளியீடு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட தனுஷ், “இனி மாறன் திரைப்படம் உங்களுடையது, ஓம் நமச்சிவாய.” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக்ஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய அனைத்து வீடியோக்களுமே Video Unavailable this Video is Private என்று வந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com