சினிமா
விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.62 லட்சம் நிதியுதவி செய்த தனுஷ்
விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.62 லட்சம் நிதியுதவி செய்த தனுஷ்
வறட்சியால் உயிரிழந்த 125 விவசாயிகளின் குடும்பங்களுக்கு நடிகர் தனுஷ் தலா 50 ஆயிரம் ரூபாயை உதவித் தொகையாக வழங்கி உள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான சங்கராபுரத்திற்கு சென்ற தனுஷ் கோயில் வழிபாட்டில் கலந்து கொண்டார். அதன்பின் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்த அவர், ரூ.62 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தனுஷ், விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்றும், விவசாயிகளைக் காப்பதற்கு தன்னால் இயன்ற முதல் உதவியை செய்திருப்பதாகவும் கூறினார். தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் விவசாய பணிகள் தொடர்பாக கணக்கெடுப்பு மேற்கொண்டு, விவசாயிகளுக்கு உதவ திட்டமிட்டிருப்பதாகவும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.