\
”தனுஷ் நடித்த அந்தப்படம் பெண்களுக்கு எதிரானது”- 7 ஆண்டுகளுக்கு பிறகு கிளம்பிய சர்ச்சை!

”தனுஷ் நடித்த அந்தப்படம் பெண்களுக்கு எதிரானது”- 7 ஆண்டுகளுக்கு பிறகு கிளம்பிய சர்ச்சை!

”தனுஷ் நடித்த அந்தப்படம் பெண்களுக்கு எதிரானது”- 7 ஆண்டுகளுக்கு பிறகு கிளம்பிய சர்ச்சை!
Published on

நடிகர் தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா படம் பெண்களுக்கு எதிரானது என்று அப்படத்தில் நடித்த நடிகரே குற்றம் சாட்டியுள்ளார். வேறு யார் விமர்சித்திருந்தாலும் சர்ச்சையாகியிருக்காது. அதே படத்தில் நடித்த நடிகர் அபய் தியோல்தான் என்பதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் தனுஷ் நடித்த பாலிவுட் படமான ராஞ்சனா கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. ஆனந்த் எல்.ராய் இயக்க தனுஷ், சோனம் கபூர், அபய் தியோல் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தில் நடித்த அபய் தியோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஞ்சனா படத்தை விமர்த்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், “இந்தப் படம் பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்டுள்ளது. பெண்ணின் உரிமைகளுக்கு எதிராக இருப்பதால் வரலாறு இப்படத்தை கனிவாகப் பார்க்காது.

பல தசாப்தங்களாக பாலிவுட்டின் கதைக்கரு பெண்ணை ஒரு ஆண் துரத்தி துரத்தி காதலிப்பதாகவும் அதன்பிறகு பெண் ஒப்புக்கொள்வது போலவும் எடுக்கிறார்கள். ஆனால், உண்மையில் நிஜத்தில் அப்படியல்ல. சினிமாவில் மட்டுமே பெண் ஒப்புக்கொள்வாள். இப்படி தொடர்ச்சியாக பெண்களை துரத்துவது பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கே வழிவகுக்கும்” என்று முற்போக்குடன் பேசியிருப்பதற்கு பலர் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com