\
உங்கள் ரசிகர்களுக்காக வருடம் இரண்டு படம்: சிம்புக்கு நண்பன் தனுஷ் கோரிக்கை

உங்கள் ரசிகர்களுக்காக வருடம் இரண்டு படம்: சிம்புக்கு நண்பன் தனுஷ் கோரிக்கை

உங்கள் ரசிகர்களுக்காக வருடம் இரண்டு படம்: சிம்புக்கு நண்பன் தனுஷ் கோரிக்கை
Published on

உங்கள் ரசிகர்களுக்காக வருடத்திற்கு இரண்டு படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சிம்புக்கு நடிகர் தனுஷ் கோரிக்கை வைத்திருக்கிறார்.

சினிமாவில் நடிகராக சிம்பு மூலம் அறிமுகமானவர் சந்தானம். அவர் ஹீரோவாக நடித்துள்ள சக்கப் போடு போடு ராஜா’ படத்தில் நடிகர் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதன் பாடல்களை ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தனுஷ் பேசினார். அப்போது “சிம்பு இசையமைத்த பாடல்களை என்னை கேட்க சொல்லி அனுப்பினார். அவருக்காக கேட்டேன். மேலும் இதன் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். அவருக்காகவே நான் இந்த விழாவுக்கு வந்தேன். நான் அவரை எனது விழாவுக்கு வர சொல்லி கூப்பிட்டால் அவர் நிச்சயம் வருவார். நானும் அவரும் நல்ல நட்புடன் இருக்கிறோம். இடையில் இருப்பவர்களுக்குதான் ஏதோ பிரச்னை. எனது ரசிகர்கள் சிம்பு படத்தை பார்க்க வேண்டும். அவரது ரசிகர்கள் என் படத்தை பார்க்க வேண்டும். அப்போதுதான் தேய்ந்து கொண்டு வரும் தமிழ் சினிமா புத்துணர்ச்சி பெறும். சிம்பு, உங்களிடம் இருக்கும் ரசிகர்களுக்காக நீங்கள் வருடத்திற்கு இரண்டு படங்களில் நடிக்க வேண்டும். அது உங்களின் கடமை. ரசிகர்கள் சார்பில் நான் இதை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

சிம்புவுக்கும் தனுஷுக்கும் இடையில் பனிப்போர் நிலவுவதாக வலம் வந்த செய்தி தனுஷ் பேச்சினால் தற்சமயம் தகர்ந்து போய் உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com