\
தனுஷ் இயக்கத்தில் சமந்தாவின் மாமனார்

தனுஷ் இயக்கத்தில் சமந்தாவின் மாமனார்

தனுஷ் இயக்கத்தில் சமந்தாவின் மாமனார்
Published on

தனுஷ் இயக்கத்தில் சமந்தாவின் மாமனாரான நாகார்ஜூனா நடிக்க இருப்பதாக செய்தி பரவி வருகிறது.

தனுஷ் தற்சமயம் தமிழ் சினிமாவில் செம பிசி. வெற்றிமாறனின் ‘வடசென்னை’,கெளதம் மேனனின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகனின் ‘மாரி2’ மேலும் கார்த்திக் சுப்புராஜ், துரை செந்தில்குமார் படங்களில் இணைய உள்ளார். இதுபோக கென் ஸ்காட் இயக்கும் ‘தி எக்ஸ்டாடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார்.

மேலும்‘தேனாண்டாள் ஸ்டியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படம் ஒன்றை தனுஷ் இயக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனத்தின் ஹேமா ருக்மணி அறிவித்திருந்தார். இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிகை சமந்தாவின் மாமனாரும் தெலுங்கு நடிகருமான நாகார்ஜூனா நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளதாக தெரிகிறது. அதற்காகவே நாகார்ஜூனாவை படக்குழு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும் செய்தி வருகிறது. ஆனால் இதை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com