\
தனுஷின் 43ஆவது திரைப்படம்: நாளை தொடங்குகிறது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு

தனுஷின் 43ஆவது திரைப்படம்: நாளை தொடங்குகிறது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு

தனுஷின் 43ஆவது திரைப்படம்: நாளை தொடங்குகிறது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு
Published on: 

தனுஷ் நடிக்கும் 43வது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நாளை ஹைதராபாத்தில் தொடங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதை முடித்துக் கொண்டு தன்னுடைய ஹாலிவுட் படமான "தி க்ரே மேன்" படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றார் தனுஷ். சுமார் ஐந்து மாதங்கள் அங்கு தங்கியிருந்த அவர் தன்னுடைய காட்சிகளை முடித்து விட்டு நேரடியாக ஹைதராபாத் திரும்பினார். அங்கு மூன்று நாட்கள் ஓய்வுக்குப் பிறகு, நாளை முதல் தனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

ஏற்கெனவே 80 சதவித காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், மீதமிருக்கும் காட்சிகள் மட்டும் தற்போது படமாக்கப்பட உள்ளனர். இதனால் முழு படப்பிடிப்பையும் முடித்துக்கொண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் படக் குழுவினர் சென்னை திரும்கின்றனர். இந்தப் படத்தை முடித்தவுடன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

- செந்தில்ராஜா 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com