’தனுஷ் 43’ படத்தின் ஷூட்டிங் இன்றுமுதல் துவக்கம்!
கார்த்திக் நரேன் இயக்கும் ‘தனுஷ் 43’ படத்தின் ஷூட்டிங் இன்று முதல் துவங்கியுள்ளது.
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’ஜகமே தந்திரம்’ விரைவில் வெளிவரவிருக்கின்றன. மித்ரன் ஜவகர், ராம்குமார், செல்வராகவன் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார். அதற்கு முன்பாக, கார்த்திக் நரேனின் பெயரிடப்பட்டாத ‘தனுஷ் 43’ படத்தில் நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். நடிகை ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி உள்ளிடோர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ’தனுஷ் 43’ படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது. இதுகுறித்து, ஜிவி பிரகாஷ் பாடல் காட்சி இன்று படமாக்கப்படவுள்ளதாகவும், படத்தின் ஓபனிங் பாடலை விவேக் எழுத தனுஷ் பாடியிருப்பதாக தெரிவித்துள்ளார்.