10 ஆண்டுகளுக்கு பின் ஆந்திராவில் ரீ-ரிலீஸ் ஆன '3'..  ஹவுஸ்ஃபுல் ஆன திரையரங்குகள்!

10 ஆண்டுகளுக்கு பின் ஆந்திராவில் ரீ-ரிலீஸ் ஆன '3'.. ஹவுஸ்ஃபுல் ஆன திரையரங்குகள்!

10 ஆண்டுகளுக்கு பின் ஆந்திராவில் ரீ-ரிலீஸ் ஆன '3'.. ஹவுஸ்ஃபுல் ஆன திரையரங்குகள்!

தனுஷ் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான 3 திரைப்படம் தற்போது ஆந்திராவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 3. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளிவருவதற்கு முன்பே 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் உலகம் முழுக்க பிரபலமானது.  

இந்நிலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு '3' படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தனுஷின் 3 படம் இன்று  ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் காலை முதல் 200-க்கும் அதிகமான காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகி உள்ளது.

இதையும் படிக்க: செப்டம்பர் 8 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com