உலகளவில் 7 ஆம் இடம் ! ரவுடி பேபி பாடல் நிகழ்த்திய சாதனை !

உலகளவில் 7 ஆம் இடம் ! ரவுடி பேபி பாடல் நிகழ்த்திய சாதனை !

உலகளவில் 7 ஆம் இடம் ! ரவுடி பேபி பாடல் நிகழ்த்திய சாதனை !
Published on

தனுஷின் ‘மாரி 2’ படத்தின் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் யூடியூப்பில் உலகளவில் அதிகம் பார்வையிட்ட பாடல்கள் பட்டியலில் 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதே பாடல் இந்திய அளவில் முதலிடம் பிடித்தும் அசத்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குநர் பாலாஜி மோகன் - நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவான திரைப்படம் மாரி. இந்தப்படம் பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் தனுஷ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து மாரி படத்தின் இரண்டாம் பாகம் ‘மாரி 2’ என்ற பெயரில் வெளியாகியது. 

இந்த படத்தில் தனுஷ், சாய் ‌பல்லவி, வரலட்சுமி, மலையாள நடிகர் டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படத்திற்கு, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். மேலும் இசைஞானி இளையராஜா ‘மாரி 2’வில் ஒரு பாடலை பாடினார்.

தனுஷ்-யுவன் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், படத்தின் பாடல்கள் பிரபலமாக டிரண்ட் ஆகின. இதில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த பாடல் ‘ ரவுடி பேபி’. அந்த பாடலை தனுஷே பாடினார். பாடலின் வரிகள் எளிதாகவும் மற்றும் அனைவரையும் கவரும் வகையில் இருந்ததால், ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தும் சாதனைப் படைத்து குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com